/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரான்மலையில் மீண்டும் புறக்காவல் நிலையம்
/
பிரான்மலையில் மீண்டும் புறக்காவல் நிலையம்
ADDED : செப் 11, 2025 06:52 AM
பிரான்மலை : சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் மூடப்பட்ட புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இவ்வொன்றியத்தில் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அதிகம் வந்து செல்லும் முக்கிய இடமாக பிரான்மலை உள்ளது. இங்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு ஒரு எஸ்.ஐ., 2 போலீசார் பணியமர்த்தப்பட்டனர். தற்போது அது மூடப்பட்டு சதுர்வேதமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போலீசார் அவ்வப்போது ரோந்து வந்து செல்கின்றனர்.
இங்கு, வெளியூர்களில் இருந்து வரும் 'குடி'மகன்களின் அட்டகாசம், ரவுடியிசம் அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளபட்டியில் இருந்து பிரான்மலை வழியாக புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு புறவழியாகச் செல்ல இச்சாலையே பயன் படுகிறது.
போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ள பிரதான சாலையில் சென்றால் போலீசாரின் வாகன சோதனைக்கு உட்பட நேரிடும் என்பதால் இச்சாலையில் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன. மூடப்பட்ட புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.