/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வளர்ந்த கருவேல மரங்கள் வாகன ஓட்டிகள் பாதிப்பு
/
வளர்ந்த கருவேல மரங்கள் வாகன ஓட்டிகள் பாதிப்பு
ADDED : அக் 25, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: மழை காரணமாக ரோட்டை மறைத்து பல இடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதால் வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் கருவேல மரங்கள் இருப்பது தெரியாமல் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது கண்ணில் கருவேல மரங்கள் அடித்து பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
திருப்பாச்சேத்தி - படமாத்துார் சாலை, பழையனுார் - ஓடாத்துார் சாலை உள்ளிட்ட சாலைகளில் கருவேல மரங்கள் ரோட்டின் பாதியளவிற்கு மறைத்து வளர்ந்துள்ளன.
பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன் சாலையோர கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஒட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.