/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கையுந்து பந்து போட்டி ஆக்ஸ்வர்ட் பள்ளி முதலிடம்
/
கையுந்து பந்து போட்டி ஆக்ஸ்வர்ட் பள்ளி முதலிடம்
ADDED : அக் 31, 2025 12:31 AM

சிவகங்கை:  காரைக்குடியில் நடந்த மாவட்ட கையுந்து பந்து போட்டியில் முதலிடம் பிடித்த சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
காரைக்குடியில் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கையுந்து பந்து போட்டி நடந்தது.
14 வயதிற்குட்பட்டோர் பிரிவு போட்டி இறுதி ஆட்டத்தில் திருப்புவனம் வேலம்மாள் பள்ளி மாணவர்களுடன், சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் விளையாடி, 25:21, 25:19 என்ற நேர் செட் கணக்கில் சிவகங்கை ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். டிசம்பரில் ராணிப்பேட்டையில் நடக்க உள்ள மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
மாணவர்களை பள்ளியின் மீனா, முதல்வர் லதா, பயிற்சியாளர் சதீஷ்குமார் பாராட்டினர்.

