/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாரியம்மன் கோயிலில் பால்குடம், வேல் காவடி
/
மாரியம்மன் கோயிலில் பால்குடம், வேல் காவடி
ADDED : மார் 25, 2025 09:50 PM

தேவகோட்டை: தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி உற்சவம் கடந்த 18 ந்தேதி கணபதி ஹோமம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. எட்டு தினங்களாக தினமும் மாலையில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு வெவ்வேறு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
மாலையில் அம்மன் கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்தார். பக்தர்கள் அக்னிச்சட்டி, அக்னி காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், வேல் காவடி, பறவை காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மன் கோவில் முன்பு தீமிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து வெள்ளி கவசம் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
இரவில் அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்வும், பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.