/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைக்கிராமத்தில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர் வாடல்: இருமுறை நெல் துாவியும் பயனில்லாததால் கவலை

ADDED : அக் 29, 2024 05:20 AM

இளையான்குடி அருகே சாலைக்கிராமம், சூராணம்,துகவூர், பஞ்சாத்தி, கீரனுார், சமுத்திரம், ஞானசமுத்திரம், முத்துார், வருந்தி, புதுக்கோட்டை, சாத்தனுார் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் 2 ஆயிரம் எக்டேருக்கும் மேற்பட்ட பரப்பளவில் ஏராளமான விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
செப்., மாதம் பெய்த மழையை நம்பி விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் செலவு செய்து நெல் விதைகளை துாவினர்.
தொடர்ந்து மழை பெய்யாததால் விதை நெல் சேதமானதைத் தொடர்ந்து மீண்டும் விவசாயிகள் நெல்விதைகளை துாவிய நிலையில் மழை பெய்ததை தொடர்ந்து தற்போது நெற்பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்யாத காரணத்தினால் கடந்த சில நாட்களாக நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வாடி வருகிறது.
சாலைக்கிராமம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் கூறியதாவது:
மேற்கண்ட கிராமங்களில் செப்., மாதம் பெய்தமழையை நம்பி நெல் விதைகளை துாவினோம். தற்போது முளைத்த நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து வரும் நிலையில் தொடர்ந்து மழை பெய்யாத காரணத்தினால்நெற்பயிர்கள் வாடி வருகின்றன.
மேலும் கண்மாய்களிலும், நீர் நிலைகளிலும் தண்ணீர் இல்லாத காரணத்தினால் வாடிய நெற்பயிர்களை காப்பாற்ற முடியாமல்போராடி வருகிறோம். ஒரு சில கிராமங்களில் நெற்பயிர்கள் முற்றிலும் கருகியதால் மிகுந்த நஷ்டம்ஏற்பட்டுள்ளது.
ஆகவே மாவட்ட நிர்வாகம் சாலைக்கிராமம்சுற்று வட்டார பகுதிகளில் மழை இல்லாமல் கருகியநெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.