/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாக்கோட்டையில் நெல் நடவு பணி மும்முரம்; நோய் கட்டுப்படுத்த ஆலோசனை தேவை

ADDED : டிச 01, 2024 11:54 PM

காரைக்குடி; சாக்கோட்டை வட்டாரத்தில் தொடர் மழைக்கு நெல் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், மழைக்கால நோய் தாக்குதலில் இருந்துபயிரை காப்பாற்ற வேளாண்மை துறை ஆலோசனை அளிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
சாக்கோட்டை வட்டாரத்தில் 4,000 எக்டேரில் மானாவாரி, கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு செய்துள்ளனர். தொடர் மழைக்கு கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதனால், கண்மாய் பாசனம் மூலம் டீலக்ஸ், ஆர்.என்.ஆர்., ரக நெல்லை சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து வருகிறது.
இந்நிலையில் மழை காரணமாக பயிருக்கு நோய் தாக்குதல் ஏற்படாமல் இருக்க வேளாண்மை அதிகாரிகள் ஆலோசனை அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது, தொடர் மழைக்கு நெற்பயிரில் பழ, வெங்காய தாள் இலை நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்த வேளாண்மை துறை போதிய மருந்து, தடுப்பு வழிமுறைகளை வழங்க வேண்டும், என்றனர்.