/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் நெல் கொள்முதல் நிலையம்
/
மானாமதுரையில் நெல் கொள்முதல் நிலையம்
ADDED : பிப் 04, 2024 11:56 PM
மானாமதுரை: மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நெல் விவசாயம் செய்த விவசாயிகள் அறுவடை பணிகளை துவக்கியதை தொடர்ந்து இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட விளத்தூர், ராஜகம்பீரம், சோமாத்துர் உள்ளிட்ட கிராமங்களில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை எம்.எல்.ஏ., தமிழரசி திறந்து வைத்தார்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, துணைத் தலைவர் முத்துச்சாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் துரைராஜாமணி, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, ஊராட்சி தலைவர்கள், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.

