/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொடர் மழையால் சாவியான நெல்: விவசாயிகள் கவலை
/
தொடர் மழையால் சாவியான நெல்: விவசாயிகள் கவலை
ADDED : பிப் 11, 2025 05:05 AM
காரைக்குடி: சாக்கோட்டை வட்டாரத்தில் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், தொடர் மழை காரணமாக போதிய விளைச்சல் இல்லாததோடு, ஏக்கருக்கு எட்டு மூடை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. சாக்கோட்டை பகுதி விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வரை செலவு செய்து நெல் விவசாயத்தில் ஈடுபட்டனர்.
தற்போது, விவசாயிகள் அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாண்டு தொடர்ந்து மழை பெய்ததால் நெல் விவசாயம் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளதோடு, ஏக்கருக்கு 8 நெல் மூடை குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
களத்தூர் பாலமுருகன் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து டீலக்ஸ் ரக நெல் பயிரிட்டேன். தொடர் மழை காரணமாக நெற்பயிர் நீர்ச்சாவியானது. இதனால், ஆண்டுதோறும் ஏக்கருக்கு 30 மூடை நெல் கிடைக்கும்.ஆனால் இவ்வாண்டு மழை பாதிப்பால் 8 முதல் 10 மூடை வரை விளைச்சல் குறைந்துஉள்ளது என்றார்.