நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் தேசிய மாணவர் படை சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு முதல்வர் நாவுக்கரசு தலைமையில் மாணவ மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்தியா திறன் மேம்பாடு என்ற தலைப்பில் கல்லுாரி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது. தமிழ்த்துறைத் தலைவர் கண்ணதாசன், முன்னாள் லெப்டினன்ட் பாண்டியராஜன், கல்லுாரி என்.சி.சி.அலுவலர் லெப்டினன்ட் மாரி பங்கேற்றனர். ஓவியப்போட்டியில் கீர்த்திகா முதலிடமும், சுவாதிஸ்ரீ இரண்டாமிடமும், மணிகண்டன் மூன்றாமிடமும் பெற்றனர்.