ADDED : ஏப் 14, 2025 05:20 AM

சிவகங்கை: குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நேற்று அனைத்து சர்ச்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்று, சர்ச்சில் வழிபாடு செய்தனர்.
* சிவகங்கை அலங்கார அன்னை சர்ச்சில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்தவர்கள், புனித ஜஸ்டீன் பள்ளியில் இருந்து குருத்தோலைகளை ஏந்தியவாறு, ஊர்வலமாக மதுரை ரோடு வழியாக சர்ச்சிற்கு சென்றனர். அங்கு சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பாதிரியார் சேசுராஜா, உதவி பாதிரியார் கிளிண்டன், மறைமாவட்ட செயலாளர் பிரான்சிஸ் பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* சிவகங்கை அருகே வல்லனி அன்னை தெரசா சர்ச்சில் பாதிரியார்சூசைமாணிக்கம் தலைமையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். சர்ச்சில் சிறப்பு திருப்பலி நடந்தது.
காரைக்குடி: செக்காலை புனித சகாய மாதா சர்ச்சில் பாதிரியார் சார்லஸ், புனித நீரால் குருத்தோலைகளை அர்ச்சித்தார். குருத்தோலைகளை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர். சிலுவையினை ஏந்தி சென்றனர்.
இந்த ஊர்வலம் அம்பேத்கர் சிலையில் இருந்து செக்காலை ரோடு, கல்லுாரி ரோடு வழியாக சகாய மாதா சர்ச்சை அடைந்தது. மனித நேய பேரவை சார்பில் ரத்ததானம் செய்தனர்.
* செஞ்சை குழந்தை தெரசாள், அரியக்குடி வளன் நகர் குழந்தையேசு, ஆவுடைபொய்கை தூய அந்தோனியார், மானகிரி புனித ஆரோக்கியஅன்னை சர்ச்களிலும் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது.
தேவகோட்டை: ராம்நகர் உலக மீட்பர் சர்ச்சில் பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்தார். ஜோசப் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஆரோக்கியசாமி, தாமஸ் பங்கேற்றனர். சிறப்பு திருப்பலி நடந்தது.
* புனித சகாய அன்னை சர்ச்சில் வட்டார அதிபர் சந்தியாகு தலைமை வகித்தார். உதவி பாதிரியார் ஸ்டீபன் முன்னிலை வகித்தார்.
திருப்புத்துார்: தென்மாபட்டு புனித அந்தோணியார் சர்ச்சில் பாதிரியார் அற்புத அரசு தலைமை வகித்தார். கருமாத்துார் குரு மட அதிபர் அமல்ராஜ், செல்வம் பிரார்த்தனை செய்தனர்.