/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓரிரு வாரத்திற்குள் பாம்பன் பாலம் திறப்பு பொது மேலாளர் பேட்டி
/
ஓரிரு வாரத்திற்குள் பாம்பன் பாலம் திறப்பு பொது மேலாளர் பேட்டி
ஓரிரு வாரத்திற்குள் பாம்பன் பாலம் திறப்பு பொது மேலாளர் பேட்டி
ஓரிரு வாரத்திற்குள் பாம்பன் பாலம் திறப்பு பொது மேலாளர் பேட்டி
ADDED : நவ 30, 2024 02:33 AM

சிவகங்கை:பாம்பன் பாலம் ஓரிரு வாரத்திற்குள் திறக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும்,'' என சிவகங்கையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.,சிங் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் தரம் உயர்த்தப்படும். பாம்பன் பாலம் குறித்து மக்களுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டார். ஓரிரு வாரத்திற்குள் பாம்பன் பாலம் வழியாக ரயில்கள் இயக்கப்படும்.
சிவகங்கையில் ரயில்கள் அனைத்தும் நின்று செல்வதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு செய்யப்படும். மன்னார்குடி -- காரைக்குடி, காரைக்குடி - - சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.செங்கோட்டை -- சென்னை ரயில் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா, கோட்ட (இயக்கம்) மேலாளர் பிரசன்னா உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.