/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி மாநகராட்சியிடம் ஊராட்சிகள் ஒப்படைப்பு
/
காரைக்குடி மாநகராட்சியிடம் ஊராட்சிகள் ஒப்படைப்பு
ADDED : ஜன 28, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் கோவிலுார் தளக்காவூர் அரியக்குடி உள்ளிட்ட ஊராட்சிகள் காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஊராட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இந்த 5 ஊராட்சிகளை மாநகராட்சியிடம் ஒப்படைப்பதற்கான பணி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம்
மற்றும் மகாலிங்கம் ஆகியோர் காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் சித்ராவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தனர். இந்நிகழ்வில், மேயர் முத்துத்துரை, உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.