sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் பங்குனி தேரோட்டம் 

/

சிவகங்கையில் பங்குனி தேரோட்டம் 

சிவகங்கையில் பங்குனி தேரோட்டம் 

சிவகங்கையில் பங்குனி தேரோட்டம் 


ADDED : ஏப் 11, 2025 05:01 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் ஏப்., 2 ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது. விழாவை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தினமும் காலை 8:00 மணிக்கு மண்டகப்படி எழுந்தருளினார்.

தினமும் இரவு 8:30 மணிக்கு மயில், ரிஷபம், அன்னம், யானை, ஆட்டுகிடாய், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. 9ம் நாளான நேற்று மாலை 4:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று மாலை 5:06 மணிக்கு தேரின் கீழ் சிதறு தேங்காய் உடைத்து, அபிேஷகம் செய்த பின், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது.

தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து, நிலையை அடைந்தது. 10 ம் நாளான இன்று தீர்த்தவாரி, இரவு 10:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.






      Dinamalar
      Follow us