/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் கோயிலில் பங்குனி திருவிழா: அடிப்படை வசதி இன்றி பக்தர்கள் தவிப்பு l
/
திருப்புவனம் கோயிலில் பங்குனி திருவிழா: அடிப்படை வசதி இன்றி பக்தர்கள் தவிப்பு l
திருப்புவனம் கோயிலில் பங்குனி திருவிழா: அடிப்படை வசதி இன்றி பக்தர்கள் தவிப்பு l
திருப்புவனம் கோயிலில் பங்குனி திருவிழா: அடிப்படை வசதி இன்றி பக்தர்கள் தவிப்பு l
ADDED : மார் 27, 2025 07:03 AM

திருப்புவனம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினமும் அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, பொம்மை, கரும்பு தொட்டில் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம், பக்தர்கள் வருகையை முன்னிட்டு மாரியம்மன் கோயிலில் இருந்து யூனியன் அலுவலகம் வரை சாலையின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட வளையல், பொம்மை, கடைகள் அமைத்து பலரும் வியாபாரம் செய்து வருகின்றனர்.
சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை. குடிநீர், தற்காலிக கழிப்பறை என எதுவுமே இல்லை. பொதுமக்கள் கடைகளில் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். கழிப்பறை வசதி இன்றி வைகை ஆற்றில் ஒதுங்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது. மாரியம்மன் கோயில் தொடங்கி கோட்டை பஸ் ஸ்டாப் வரை எந்த இடத்திலும் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை.
பேரூராட்சியிடம் தற்காலிக கழிப்பறை இருந்தும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. பத்திரப்பதிவு அலுவலகம் அருகே கழிப்பறை இருந்தும் செயல்பாட்டிற்கு வரவில்லை.மாரியம்மன் கோயில் திருவிழா முடிந்த மறுவாரம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனி திருவிழா பத்து நாட்கள் நடைபெற உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும்.