/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் பங்குனி உத்திர பால்குட விழா
/
சிங்கம்புணரியில் பங்குனி உத்திர பால்குட விழா
ADDED : ஏப் 12, 2025 06:23 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி வடக்கு வேளார் தெரு பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர பால்குட விழா நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு சேவுகப்பெருமாள் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது.
அங்கு முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஏற்பாடுகளை வடக்கு வேளாளர் தெரு பொதுமக்கள் செய்திருந்தனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிங்கம்புணரி பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
எஸ்.புதூர் ஒன்றியத்தில் புழுதிபட்டி சத்திரம் குன்று பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. புழுதிபட்டி வில்லியார் கோயிலில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
செட்டிகுறிச்சி வெள்ளிமலை ஆண்டி கோயிலில் அபிஷேகம் அன்னதானம் நடந்தது.