ADDED : ஜன 06, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை; மானாமதுரை அருகே பறையன்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர்,ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார்.
தலைவர் மூர்த்தி, பொருளாளர் சங்கிலி, மேலாண்மை குழு தலைவர் அழகுஜோதி, துணை தலைவர் சீதா முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சரத்குமார் வரவேற்றார். பள்ளி வளர்ச்சி குறித்து தீர்மானம் நிறைவேற்றினர். ஆசிரியை வீரலட்சுமி பங்கேற்றனர். பள்ளியில் ஆங்கில மொழி திறன் போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவிகள் அகிலா, அக்சயா, நித்யா, ரித்திகா, சூரிய பிரபா ஆகியோருக்கு தலா ரூ.500 பரிசு வழங்கினர். ஆசிரியை ஸ்ரீவித்யா நன்றி கூறினார்