/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி திறக்க உள்ள நிலையில் பெற்றோர்கள் வேதனை:பராமரிப்பில்லாத அரசு பள்ளிகளால் தவிப்பு
/
பள்ளி திறக்க உள்ள நிலையில் பெற்றோர்கள் வேதனை:பராமரிப்பில்லாத அரசு பள்ளிகளால் தவிப்பு
பள்ளி திறக்க உள்ள நிலையில் பெற்றோர்கள் வேதனை:பராமரிப்பில்லாத அரசு பள்ளிகளால் தவிப்பு
பள்ளி திறக்க உள்ள நிலையில் பெற்றோர்கள் வேதனை:பராமரிப்பில்லாத அரசு பள்ளிகளால் தவிப்பு
ADDED : மே 25, 2025 11:09 PM

திருப்புவனம்: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பல பள்ளிள் பராமரிப்பு இன்றி பாழடைந்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை மே 1ம் தொடங்கி ஜூன் 1ல் முடிகிறது. கோடை வெயிலின் தாக்கம் குறைந்ததால் ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. திருப்புவனம் வட்டாரத்தில் அல்லிநகரம், மாரநாடு, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் 65 தொடக்கப்பள்ளிகள், 35 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகள் அனைத்தும் கடந்த ஒரு மாதமாக பூட்டி கிடக்கின்றன. மழை, காற்று உள்ளிட்ட காரணங்களால் பள்ளி வளாகங்களில் மின்கம்பி, ஒயர்கள் தாழ்வாகவும், ஒருசில இடங்களில் துண்டிக்கப்பட்டும் உள்ளன.
பள்ளி வளாகங்களில் மர கிளைகள், குப்பைகளால் நிறைந்து காணப்படுகின்றன. பல இடங்களில் பள்ளி வளாகங்களை மதுபிரியர்கள் பார்களாக பயன்படுத்தியதால் வளாகம் முழுவதும் கண்ணாடி துகள்கள், பிளாஸ்டிக் கவர்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இன்னும் ஐந்து நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இதனை சுத்தம் செய்ய கல்வித்துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் பள்ளிகள் பலவும் மாணவ, மாணவியர் சேர்க்கை என தொடர்ச்சியாக பள்ளிகள் இயங்கி வந்த நிலையில் அரசு தொடக்கப்பள்ளிகளில் மட்டும் ஏப்ரலுடன் மாணவ, மாணவியர் சேர்க்கையை முடித்து விட்டு கோடை விடுமுறைக்கு சென்று விட்டனர்.
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பலரும் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் யாரும் பணியாற்றும் மாவட்டங்களில் இல்லை. கிராமப்புற பள்ளிகளின் சாவிகள் அந்தந்த பகுதி மாணவ, மாணவியர்களிடமே ஆசிரியர்கள் ஒப்படைத்து விட்டு செல்வது வழக்கம். கோடை விடுமுறை முடிந்து மாணவ, மாணவியர்களே பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளது.
எனவே கல்வித்துறை அதிகாரிகள் கிராமப்புற பள்ளிகளை சுத்தம் செய்து பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.