/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலாயூர் அரசு நடுநிலைப்பள்ளி ஓட்டு கட்டடங்கள் சேதம் அச்சத்தில் பெற்றோர் தவிப்பு

ADDED : ஆக 19, 2025 08:08 AM
சிவகங்கை : இளையான்குடி அருகே மேலாயூர் அரசு நடுநிலை பள்ளி ஓட்டுக்கட்டடம் சேதமடைந்துள்ளதால், அச்சத்துடன் இருப்பதாக பள்ளி மேலாண்மை குழுவினர் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், மேலாயூரில் அரசு நடுநிலை பள்ளி செயல்படுகிறது. இங்கு மேலாயூர் உட்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 119 மாணவர்கள் வரை படிக்கின்றனர்.
பல ஆண்டாக இங்கு உள்ள பள்ளி ஓட்டு கட்டடம் பராமரிப்பின்றி இயங்குகிறது. இதனால் மழை காலங்களில் மழைநீர் வகுப்பறைக்குள் புகுந்து, மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே நடுநிலை பள்ளிக்கென உள்ள 2 ஓட்டு கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என ஆய்வுக்கு வந்த முன்னாள் கலெக்டர் ஆஷா அஜித் திடம் மனு அளித்தனர்.
ஆனால், தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய மற்றும் தொடக்க கல்வித்துறை நிர்வாகம் இம்மக்களின் கோரிக்கையை நிராகரித்தே வந்துள்ளனர். இதில் அதிருப்தியான பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்கள் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபியிடம் மனு அளித்துள்ளனர் சேதமான பள்ளி கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடமோ அல்லது ஓட்டு கட்டடத்தின் மேற்கூரையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளனர்.