/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகர் பகுதி அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கும் காலை உணவு பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை
/
நகர் பகுதி அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கும் காலை உணவு பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை
நகர் பகுதி அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கும் காலை உணவு பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை
நகர் பகுதி அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கும் காலை உணவு பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை
ADDED : நவ 21, 2024 04:40 AM

சிவகங்கை: கிராமப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளை போன்றே பேரூராட்சி, நகராட்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கில் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதியில் உள்ள 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை கூடுதலாக 433 மாநகராட்சி, நகராட்சி அரசு நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் 56,160 மாணவர்களுக்கு விரிவுபடுத்தியுள்ளனர். இத்திட்டம் தற்போது 31,008 அரசு தொடக்க பள்ளிகளில் நடக்கிறது.
நடப்பு கல்வி ஆண்டு ஜூலை 15 முதல் கிராமப்பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 - 5 ம் வகுப்பு வரை படிக்கும் 2.50 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை. பேரூராட்சி, நகராட்சி பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் படிக்கிறார்கள்.
அவர்களின் நலன் கருதியும் கிராமப்புறங்களை போன்றே பேரூராட்சி, நகராட்சியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.