ADDED : அக் 21, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டியில் உள்ள பரியான் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
அக்.19ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி, தொடர்ந்து நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை நடந்தது.
காலை 11:10 மணிக்கு வள்ளியக்கருப்பு, வீரன் சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடந்தது.
விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மாபட்டி, வெள்ளினிப்பட்டி, சிங்கம்புணரி, மட்டிக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.