/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'ஆட்சியில் பங்கு' அனைத்து கட்சிகளும் எதிர்பார்ப்பது தான் சிவகங்கை எம்.பி., கார்த்தி பேட்டி
/
'ஆட்சியில் பங்கு' அனைத்து கட்சிகளும் எதிர்பார்ப்பது தான் சிவகங்கை எம்.பி., கார்த்தி பேட்டி
'ஆட்சியில் பங்கு' அனைத்து கட்சிகளும் எதிர்பார்ப்பது தான் சிவகங்கை எம்.பி., கார்த்தி பேட்டி
'ஆட்சியில் பங்கு' அனைத்து கட்சிகளும் எதிர்பார்ப்பது தான் சிவகங்கை எம்.பி., கார்த்தி பேட்டி
ADDED : செப் 29, 2024 02:58 AM
திருப்புத்துார்:ஆட்சியில் பங்கு என்பது அனைத்துக் கட்சிகளின் யதார்த்தமான எதிர்பார்ப்பே' என்று திருப்புத்துாரில் சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
நன்றி அறிவிப்பு கூட்டங்களில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: லோக்சபா எம்.பி.யால் நேரடியாக திட்டப்பணிகள் செய்ய முடியாது. மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் தேவைகளை கொண்டு சென்று தான் நிறைவேற்ற முடியும்.
ஆண்டுக்கு ரூ.5 கோடி தொகுதி நிதி 6 தொகுதிகளுக்கும் சமமாக ஒதுக்கி நிறைவேற்றப்படும். சிவகங்கை தொகுதி தொழில் வளர்ச்சிக்காக முதல்வரிடம் பல கோரிக்கைகள் வைத்துள்ளோம். பிரதமரிடம் முதல்வர் கேட்டபடி தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். என்கவுன்டர் கொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. நல்ல காவல்துறைக்கு இது அழகல்ல.
பூரண மதுவிலக்கு வெற்றியடையும் கொள்கை அல்ல. நெடுஞ்சாலை, வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே விற்க வேண்டும். மது வாங்குவோரிடம் ஆதார் வாங்க வேண்டும். டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்க வேண்டும். ஏற்கனவே கள்ளச்சாராயம் உள்ளது. மதுவிலக்கு என்றால் மேலும் கள்ளச்சாராயம் அதிகரிக்கும்.
சர்வதேச கார் ரேஸ் நடத்தும் அளவிற்கு நம்மால் ரோடு போட தேவையான தொழில்நுட்பம், திறமை, பொறியாளர்கள் உள்ளதை நிரூபித்திருக்கிறோம்.
அந்த தொழில்நுட்பத்தை வைத்து மழையிலும் நமது ரோடுகள் குண்டும், குழியுமாக இல்லாமல் போட முடியும்.
எல்லாக்கட்சியும் ஆட்சியை பிடிக்க நினைப்பது நியாயமானதே. கணிசமான பிரதிநிதிகள் வெற்றி பெறும் போது அவர்களுக்கு ஆட்சியில் பங்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பது யதார்த்தமானது.
இவ்வாறு அவர் கூறினார்.