ADDED : ஜன 16, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் இருந்து பிற பகுதிகளுக்குச் செல்லும் டவுன் பஸ்களில் வழித்தடம் இல்லாததால் பயணிகள் குழப்பமடைகின்றனர்.
அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் காரைக்குடியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடியில் இருந்து செட்டிநாடு மருத்துவமனை, மில் மற்றும் பாலிடெக்னிக் வழியாக ராயபுரம் வரை டவுன் பஸ்கள் சென்று வருகின்றன.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று டவுன் பஸ்கள் இயக்கப்பட்டாலும், டவுன் பஸ்களில் வழித்தட பெயர் இல்லாததால் மக்கள் பஸ்சை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.