/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டி ஊருணியால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை
/
பிள்ளையார்பட்டி ஊருணியால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை
பிள்ளையார்பட்டி ஊருணியால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை
பிள்ளையார்பட்டி ஊருணியால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை
ADDED : ஜன 07, 2025 04:56 AM

பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டியில் ஊருணிகளில் குளிக்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கூடுதல் வசதிகளை ஏற்படுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர்.
பிள்ளையார்பட்டி ஆன்மிக சுற்றுலாத்தலமாக உள்ளது. நவ., டிச., ஜன., மாதங்களில் பல மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படுகிறது. அப்போது பயணிகள் இங்குள்ள நீர்நிலைகளில் குளித்து அல்லது கை, கால் கழுவி பின்னர் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால் ஊரணிகளில் அதற்கான போதிய பாதுகாப்பு வசதி இல்லை. இப்பகுதியிலுள்ள கொங்குநாச்சியம்மன் கோயில் ஊருணியில் நீர் நிரம்பியுள்ளதால் தொடர்ந்து ஆடு,மாடுகள் கூட விழுந்து பலியாகின்றன. இரவில் பக்தர்கள் பயன்பாட்டிலும் ஆபத்து உள்ளது. இதனால் சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டியது அவசியமாகும்.
மேலும் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள திருவேட்புடையார் ஊரணிக்கு தடுப்புச்சுவர்களே இல்லை. படித்துறையும் கிடையாது. சுற்றிலும் மண் கரையே உள்ளது. இங்கும் பயணிகளுக்கு விபத்து அபாயம் காணப்படுகிறது. இதனைத் தவிர்க்க ஊருணியைச் சுற்றிலும் தடுப்புச்சுவர்கள் கட்ட நீண்டகாலமாக பொதுமக்கள் கோரி வருகின்றனர்.

