/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மைசூரு, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை விருதுநகர் வரை நீட்டிக்க வேண்டும் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 17, 2025 06:12 AM

சிவகங்கை; சிவகங்கை வழியாக மைசூரு, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை விருதுநகர் வரை நீட்டிக்க வேண்டும்என தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம், பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் 2 வது பிளாட்பாரத்தில் கூடுதல் லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும். 2 வது பிளாட்பார்மை 420 மீட்டர் வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர்.
24 பெட்டிகள் நிற்கும் விதமாக பிளாட்பார்ம் நீளத்தை 540 மீட்டர் வரை நீட்டிக்க வேண்டும்.யில் பெட்டிகள் நிற்கும்இடத்தை குறிக்கும் 'டிஜிடல் கோச்' போர்டு வைக்க வேண்டும்.
சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளை அழைத்து செல்ல பேட்டரி கார் இயக்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் சிவகங்கை, மானாமதுரையில் நின்று செல்ல வேண்டும்.
அகமதாபாத்-ராமேஸ்வரம், எர்ணாகுளம் -வேளாங்கண்ணி, பெரோஷ்பூர் - ராமேஸ்வரம்,அயோத்யா - ராமேஸ்வரம் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்களை கண்டிப்பாக சிவகங்கை, காரைக்குடியில் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ், மைசூரு - காரைக்குடிசிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை விருதுநகர் வரை நீட்டிப்பதோடு, இந்த ரயில்களை புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.