/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் ஏறி இறங்கும் பயணிகள்: கண்டக்டர்களுக்கு தலைவலி
/
திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் ஏறி இறங்கும் பயணிகள்: கண்டக்டர்களுக்கு தலைவலி
திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் ஏறி இறங்கும் பயணிகள்: கண்டக்டர்களுக்கு தலைவலி
திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் ஏறி இறங்கும் பயணிகள்: கண்டக்டர்களுக்கு தலைவலி
ADDED : பிப் 02, 2025 06:42 AM
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் பஸ்கள் நிற்கும் போது ஏறி, இறங்கும் பயணிகளால் கண்டக்டருக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது.
மதுரையில் இருந்து திருப்பாச்சேத்தி வழியாக கமுதி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள்இயக்கப்படுகின்றன. திருப்பாச்சேத்தியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வெளியூர் சென்று வருகின்றனர். நான்கு வழிச்சாலை அமைவதற்கு முன்பு திருப்பாச்சேத்தியில் நின்று பஸ் ஏறி மக்கள் செல்வர்.
நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு திருப்பாச்சேத்தியில் டோல் கேட் அமைக்கப்பட்ட பின் பலரும் டோல்கேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் டூவீலர்களை நிறுத்தி விட்டு பஸ்சில் செல்கின்றனர்.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல் உள்ளிட்ட 36 பஸ் ஸ்டாப் இருந்தன. தற்போது அவற்றின் எண்ணிக்கை 41 ஆக உயர்த்தி விட்டனர். இதில் திருப்பாச்சேத்தி டோல்கேட் நிறுத்தம் இல்லை. வெளியூரில் இருந்து திரும்புபவர்கள் திருப்பாச்சேத்தி என டிக்கெட் வாங்கி விட்டு டோல்கேட்டில் இறங்குகின்றனர். ஆனால் கண்டக்டர்கள் திருப்பாச்சேத்தி ஊர் வரை தான் திருப்பாச்சேத்தி டிக்கெட் செல்லுபடியாகும், டோல்கேட் வரை பயணம் செய்ய திருப்புவனம் டிக்கெட் வாங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதனால் தினசரி திருப்பாச்சேத்தி பயணிகளுக்கும் பஸ் கண்டக்டர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. இந்த பிரச்னை காரணமாக திருப்பாச்சேத்தி பயணிகளை பஸ்சில் கண்டக்டர்கள் ஏற்ற மறுக்கின்றனர்.
பயணிகள் கூறுகையில், திருப்பாச்சேத்தி ஊருக்குள் பெரும்பாலான பஸ்கள் வருவதில்லை, எனவே டோல்கேட்டில் டூவீலர்களை நிறுத்திவிட்டு வெளியூர் சென்று வருகிறோம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் போது டோல்கேட்டில் இறங்க திருப்புவனம் டிக்கெட் வாங்க வலியுறுத்துகின்றனர்., அனைத்து பஸ்களும் திருப்பாச்சேத்தி ஊருக்குள் வந்தால் நாங்கள் அங்கேயே நின்று பஸ் ஏறி இறங்குவோம் என்றனர்.
கண்டக்டர்கள் கூறுகையில், டோல்கேட் ஸ்டாப் கிடையாது, பஸ்களில் பாஸ்ட் டாக் ஸ்கேன் செய்ய சில நிமிடங்கள் பஸ் நிற்கும். மனிதாபிமான அடிப்படையில் பயணிகளை ஏற்றி இறக்குகிறோம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் போது திருப்பாச்சேத்தி டிக்கெட் எடுத்து விட்டு இங்கு வந்து இறங்குகின்றனர். டிக்கெட் பரிசோதகர் ஆய்வு செய்தால் நாங்கள் பதில் சொல்ல வேண்டியுள்ளது, என்றனர்.