/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வே ஸ்டேஷனில் வளர்ச்சி பணி தொய்வு விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை
/
ரயில்வே ஸ்டேஷனில் வளர்ச்சி பணி தொய்வு விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை
ரயில்வே ஸ்டேஷனில் வளர்ச்சி பணி தொய்வு விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை
ரயில்வே ஸ்டேஷனில் வளர்ச்சி பணி தொய்வு விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை
ADDED : மார் 04, 2024 05:29 AM

காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பல மாதங்களாக தொய்வுடன் நடக்கும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை, ராமேஸ்வரம், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடைகளில் வண்டி எண் குறித்த எல்இடி., விளக்குகள் அமைக்கவும், பயணிகள் பயன்பாட்டிற்கு லிப்ட் அமைத்திடவும் கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில், காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.13.91 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் காம்பவுண்ட் சுவர், லிப்ட், ஆர்ச், நவீன மேற்கூரை, பைக் ஸ்டாண்ட், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆன நிலையில் பணிகள் மந்தமாக நடந்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
இதே போன்று திட்டப் பணிகள் தொடங்கப்பட்ட பிற ரயில்வே ஸ்டேஷன்களில் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் 50 சதவீத பணிகள் கூட முழுமை அடையாத நிலை உள்ளதாகவும், பணியால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எனவே மந்தகதியில் நடந்து வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

