/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடுத்தடுத்து பழுதான அரசு டவுன் பஸ்கள் அலறியடித்து ஓடிய பயணிகள்
/
அடுத்தடுத்து பழுதான அரசு டவுன் பஸ்கள் அலறியடித்து ஓடிய பயணிகள்
அடுத்தடுத்து பழுதான அரசு டவுன் பஸ்கள் அலறியடித்து ஓடிய பயணிகள்
அடுத்தடுத்து பழுதான அரசு டவுன் பஸ்கள் அலறியடித்து ஓடிய பயணிகள்
ADDED : ஜன 30, 2025 05:33 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று காலை அடுத்தடுத்து டவுன் பஸ்கள் பழுதானதால் பயணிகள் அலறியடித்து இறங்கினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கிளை பணிமனை மூலம் 44 டவுன் பஸ்கள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படுகின்றன. 90 சதவிகித டவுன் பஸ்கள் உரிய பராமரிப்பின்றி பழுதான நிலையிலேயே இயக்கப்படுகின்றன. பஸ்களில் பிரேக் இல்லாதது, விளக்கு எரியாதது, சீட்கள் கடகட என ஆடுவது உள்ளிட்டவற்றுடன் இயக்கப்படுகிறது. பெரும்பாலான கிராமங்களுக்கு இரவு நேரத்தில் டவுன் பஸ்களை இயக்குவதில்லை.
பணிமனையிலும் பழுதான பஸ்களை சரி செய்து தருவதில்லை. நேற்று காலை மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கண்ணாரிருப்பு கிராமத்திற்கு சென்ற டவுன் பஸ் திருப்புவனம் யூனியன் அலுவலகம் அருகே வரும் போது ஆக்சில் கட்டாகி நின்றது. அதில் இருந்த சிறிய இரும்பு கிண்ணம் சாலையில் சிதறியது.
பின்னால் குருந்தங்குளம் சென்று கொண்டிருந்த டவுன் பஸ் இரும்பு சிதறலில் ஏறி இறங்கியதில் முன்பக்க டயர் பழுதாகி பஸ் ஓடி நின்றது.
பயத்தில் பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர். பஸ்களில் ஜாக்கி உள்ளிட்டவை இல்லாததால் அருகில் இருந்த பேவர் பிளாக் கற்களை எடுத்து டயர் மேலும் சேதமடையாதபடி முட்டு கொடுத்தனர்.
அடுத்தடுத்து இரு பஸ்கள் பழுதாகி ரோட்டோரம் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். காலை நேரத்தில் டவுன் பஸ்கள் பழுதாகி நின்றதால் பள்ளி, கல்லூரி, கூலி வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.
ஏற்கனவே டவுன் பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அடுத்தடுத்து இரு டவுன் பஸ்கள் பழுதாகி நின்றது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.