/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல அழுத்தம் தர வேண்டும் எம்.பி.,க்கு பயணிகள் கோரிக்கை

ADDED : ஏப் 21, 2025 06:10 AM
சிவகங்கை: மாவட்ட தலைநகரான சிவகங்கையில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல, ரயிலை நீட்டிக்க மதுரையில் ஏப்., 24ல் நடக்கும் ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் எம்.பி., கார்த்தி அழுத்தம் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ராமேஸ்வரம் முதல் அயோத்தியா, தாம்பரம் முதல் செங்கோட்டை, வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும். திருவாரூர் முதல் காரைக்குடி வரை செல்லும் ரயிலை மானாமதுரை வரையிலும், சென்னை - - காரைக்குடி இடையே ஓடும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும்.
மன்னார்குடி -- காரைக்குடி வரை செல்லும் தினசரி ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும்.
புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி வரை வாரம் ஒரு நாள் மட்டுமே செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை, வாரத்திற்கு 3 நாட்கள் இயக்க வேண்டும். அதே போன்று சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும்.
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை பகலில் ஓடும் விதமாக அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவது குறித்தும் சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி, தென்மண்டல ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என சிவகங்கை ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.