/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் வழியில் பஞ்சரான அரசு பஸ்சால் பயணிகள் பரிதவிப்பு
/
மானாமதுரையில் வழியில் பஞ்சரான அரசு பஸ்சால் பயணிகள் பரிதவிப்பு
மானாமதுரையில் வழியில் பஞ்சரான அரசு பஸ்சால் பயணிகள் பரிதவிப்பு
மானாமதுரையில் வழியில் பஞ்சரான அரசு பஸ்சால் பயணிகள் பரிதவிப்பு
ADDED : மார் 30, 2025 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் அடிக்கடி வழியில் பழுதாகி, பஞ்சராகி நிற்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சிவகங்கை, தாயமங்கலம், இளையான்குடி, பரமக்குடி, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், நரிக்குடி, வீரசோழன், பார்த்திபனுார், மல்லல், காளையார் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு 20க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் சென்று வருகின்றன.
இந்த பஸ்களில் கிராம மக்கள் வேலைக்காக மானாமதுரைக்கு வந்துவிட்டு திரும்ப ஊர்களுக்கு செல்லும் போது அடிக்கடி பஞ்சராகி விடுகிறது.