/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாற்றப்பட்ட காந்தி சிலை பஸ் ஸ்டாப் நிற்க இடமில்லாமல் பயணிகள் அவதி
/
மாற்றப்பட்ட காந்தி சிலை பஸ் ஸ்டாப் நிற்க இடமில்லாமல் பயணிகள் அவதி
மாற்றப்பட்ட காந்தி சிலை பஸ் ஸ்டாப் நிற்க இடமில்லாமல் பயணிகள் அவதி
மாற்றப்பட்ட காந்தி சிலை பஸ் ஸ்டாப் நிற்க இடமில்லாமல் பயணிகள் அவதி
ADDED : மே 23, 2025 12:14 AM

மானாமதுரை:மானாமதுரையில் மாற்றப்பட்ட காந்தி சிலை பஸ் ஸ்டாப்பில் நிற்கக்கூட இடமில்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை, சிவகங்கை ரோட்டில் 50 வருடங்களுக்கும் மேலாக காந்தி சிலை பஸ் ஸ்டாப் செயல்பட்டு வருகிறது. இங்கு மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் பஸ்களும், சிவகங்கையில் இருந்து மானாமதுரை வரும் பஸ்களும் பயணிகளை ஏற்றி,இறக்கி சென்று வருகின்றன.
சில வருடங்களாக காந்தி சிலை பஸ் ஸ்டாப் பகுதியில் பயணிகளை ஒரே இடத்தில் ஏற்றி, இறக்கி வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.
இதனை தொடர்ந்து மானாமதுரை டிராபிக் போலீசார் மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் பஸ்களை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் எதிரே உள்ள இடத்திற்கு காந்தி சிலை பஸ் ஸ்டாப்பை மாற்றினர்.
இதனால் காந்தி சிலை பஸ் ஸ்டாப் பகுதியில் ஓரளவிற்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்து வருகிறது. ஆனால் மாற்றப்பட்ட காந்தி சிலை பஸ் ஸ்டாப் பகுதியில் பயணிகளுக்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் நிற்க கூட இடமில்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.