/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் பஸ்களின்றி நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள்
/
காரைக்குடியில் பஸ்களின்றி நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள்
காரைக்குடியில் பஸ்களின்றி நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள்
காரைக்குடியில் பஸ்களின்றி நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள்
ADDED : ஜன 20, 2025 07:22 AM

காரைக்குடி: காரைக்குடியில் பஸ் ஸ்டாண்டில், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முடிந்து சொந்த ஊர் செல்ல, பஸ் கிடைக்காமல் பயணிகள் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர்.
காரைக்குடியில் புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் என இரு பஸ் ஸ்டாண்டுகள் செயல்பட்டு வருகிறது. மதுரை திருச்சி தஞ்சாவூர் ராமநாதபுரம் திருச்செந்தூர் பழனி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து பஸ்கள் சென்று வருகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி பள்ளி கல்லூரி அலுவலகங்கள் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
விடுமுறைக்காக காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் சொந்த ஊர் வந்திருந்தனர். விடுமுறை முடிந்து நேற்று தங்களது ஊர்களுக்கு செல்ல புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் காத்திருந்தனர். மதுரை, திருச்சி ராமநாதபுரம் இளையான்குடி காளையார் கோயில், கல்லல் அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு பயணிகள் பல மணி நேரம் குழந்தைகளுடனும் வயதானவர் களுடன் காத்துக் கிடந்தனர். பல மணி நேரம் ஆகியும் பஸ்கள் வராததால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். விழா காலங்களில் பிற பகுதிகளுக்கும் போதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.