/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் காத்திப்பு
/
டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் காத்திப்பு
ADDED : அக் 29, 2025 09:36 AM
திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
திருப்புவனம் அரசு மருத்துவமனையில் தினசரி 600க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும்,75 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது விருதுநகர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். மழை மற்றும் பனி காலங்களில் நோய் தொற்று காரணமாக நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகவதுண்டு.
நான்கு வழிச்சாலையை ஒட்டி அமைந்திருப்பதால் விபத்து காலங்களில் முதல் உதவி சிகிச்சை அளிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு தான் அழைத்து வரப்படுகின்றனர். 13 டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 5 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் இரவு நேரங்களில் அவசர சிகிச்சையளிக்க டாக்டர்கள் வராமல் செவிலியர், உதவியாளர்களே சிகிச்சையளிப்பதுடன் மதுரை,சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து விடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பணி நேரங்களில் டாக்டர்கள் கட்டாயம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

