/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு தலைமை மருத்துவமனையில் நிரப்பப்படாத டாக்டர்கள் பணியிடம் நோயாளிகள் ஏமாற்றம்
/
அரசு தலைமை மருத்துவமனையில் நிரப்பப்படாத டாக்டர்கள் பணியிடம் நோயாளிகள் ஏமாற்றம்
அரசு தலைமை மருத்துவமனையில் நிரப்பப்படாத டாக்டர்கள் பணியிடம் நோயாளிகள் ஏமாற்றம்
அரசு தலைமை மருத்துவமனையில் நிரப்பப்படாத டாக்டர்கள் பணியிடம் நோயாளிகள் ஏமாற்றம்
ADDED : டிச 28, 2024 07:20 AM
காரைக்குடி : காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரேடியாலஜிஸ்ட், ஆப்தமாலஜிஸ்ட் பணியிடம் காலியாக உள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்ட தலைமை மருத்துவமனை காரைக்குடியில் செயல்படுகிறது. இம்மருத்துவமனைக்கு காரைக்குடி மட்டுமின்றி புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். மாதத்திற்கு 200க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கிறது. இங்கு போதிய மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள், இல்லாததால் மருத்துவமனையில் பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகளுக்கு அடுத்த கட்ட சிகிச்சைக்கு ஸ்கேன் எடுப்பது அவசியமாகிறது.
தினமும் ஸ்கேன் எடுப்பதற்கு 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால், ரேடியாலஜிஸ்ட் பணியிடம் கடந்த பல வருடங்களாக காலியாக உள்ளது. இதனால் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகள் ஸ்கேன் செய்ய முடியாமல் பிற மாவட்டங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. இதே போல் கண் மருத்துவர் பணியிடமும் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது.
தலைமை மருத்துவர் அருள்தாஸ் கூறுகையில்: தற்போது ரேடியாலஜிஸ்ட் பணியிடம் காலியாக உள்ளது. டாக்டர் இல்லாததால் ஸ்கேன் ரிப்போர்ட் ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது. கண் மருத்துவர் மற்றும் ரேடியாலஜிஸ்ட் பணியிடம் விரைவில் நிரப்பப்படும் என்றார்.

