/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பட்டமங்கலம் ரோடு விரிவாக்க போராட்டம் அதிகாரிகள் சமாதானம்
/
பட்டமங்கலம் ரோடு விரிவாக்க போராட்டம் அதிகாரிகள் சமாதானம்
பட்டமங்கலம் ரோடு விரிவாக்க போராட்டம் அதிகாரிகள் சமாதானம்
பட்டமங்கலம் ரோடு விரிவாக்க போராட்டம் அதிகாரிகள் சமாதானம்
ADDED : டிச 14, 2024 05:41 AM
திருக்கோஷ்டியூர்: கல்லல் ஒன்றியம் பட்டமங்கலத்தில் திருக்கோஷ்டியூர்,கண்டரமாணிக்கம்,சொக்கநாதபுரம் செல்லும் ரோடுகளை மேம்படுத்த கோரி மார்க். கம்யூ சார்பில் நடந்த மறியல் போராட்டம் அதிகாரிகள் சமாதானத்தால் ஒத்தி வைக்கப்பட்டது.
பட்டமங்கலம் ரோட்டில் மார்க் கம்யூ. மாவட்டச் செயலாளர் மோகன், தாலுகா செயலாளர் முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் பாலு, கிளை செயலர்கள் மாணிக்கம்,அழகப்பன், பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் மறியல் போராட்டம் நடத்தினர். பட்டமங்கலத்திலிருந்து கண்டரமாணிக்கம், திருக்கோஷ்டியூர் செல்லும் ரோட்டிலும், சொக்கநாதபுரம் செல்லும் ரோட்டிலும் பராமரிப்பு, விரிவாக்கம், ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
போலீசார், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் போராட்டக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நெடுஞ்சாலைத்துறை டி.இ.,சந்திரன், ஏ.டி.இ.,பவித்ரா ஆகியோர் 'இரு ரோடுகளும் இருவழிச்சாலையாக தரம் உயர்த்தவும், ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டவும் மதிப்பீடு தயாராகி, நிதி அனுமதிக்கு சென்றுள்ளதாகவும், அடுத்து மழை முடிந்தவுடன் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றும்' உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டம் ஒத்தி வைப்பதாக நிர்வாகிகள் அறிவித்தனர்.

