ADDED : பிப் 02, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் காரைக்குடி-திண்டுக்கல் ரோட்டில் இருந்து அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்துவடுகசுவாமி நகர் வடக்கு தெருவுக்கு செல்ல மெட்டல் சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது.
கடந்த மாதம் பணிகள் துவங்கிய நிலையில் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக டூவீலரில் செல்லவே மக்கள் சிரமப்படுகின்றனர். மழை பெய்யும் போது சாலையில் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். எனவே தாமதமின்றி பணியை முடிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.