/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் பல மாதங்கள் இழுத்தடிப்பு
/
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் பல மாதங்கள் இழுத்தடிப்பு
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் பல மாதங்கள் இழுத்தடிப்பு
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் பல மாதங்கள் இழுத்தடிப்பு
ADDED : செப் 19, 2025 02:08 AM
சிவகங்கை: மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பென்ஷன் தொகை 4 மாதங்களாக கிடைக்காமல் இழுபறி நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் கீழ் பதிவு செய்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் 3000 பேருக்கு வாழ்வாதாரத்திற்காக மாதம் ரூ.1200 வீதம் பென்ஷன் வழங்கப்படுகிறது. மேலும் கட்டுமான தொழிலாளர்கள் 5000 பேர் வரை பென்ஷன் பெறுகின்றனர்.
இவர்களுக்கான பென்ஷன் தொகை தொழிலாளர் நல வாரியம் மூலம் மாதந்தோறும் விடுவிக்கப்படுகிறது. இந்நிலையில் பென்ஷன் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பென்ஷன் வரவில்லை.
நிலுவை பென்ஷன் விடுவிப்பு தொழிலாளர் நல வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழக நிதித்துறையில் இருந்து ஏப்., முதல் ஜூலை வரையிலான பென்ஷன் தொகையை விடுவித்துள்ளனர். இந்த தொகை விரைவில் பென்ஷன்தாரர் வங்கி கணக்கிற்கு வந்து விடும். மேலும், ஆக., செப்., மாதங்களுக்கான பென்ஷன் தொகை விரைவில் விடுவிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
மேலும், பென்ஷன் பெறுவோரிடம் வாழ்வுரிமை சான்று பெற்று வருகிறோம். இச்சான்று வழங்காதவர்களுக்கு மட்டுமே பென்ஷன் விடுபடாமல் இருந்திருக்கலாம். அவர்கள் அலுவலகத்தில் நேரடியாக வந்து மனு செய்தாலோ, ஆன்லைனில் வாழ்வுரிமை சான்றினை சமர்பித்தால், பென்ஷன் தொகை விடுவிக்கப்படும், என்றனர்.