ADDED : ஜூன் 12, 2025 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் ஜூலை 11 அன்று நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, ஓய்வு பெற்ற அரசு அலுவலர், ஊழியர்களுக்கு அன்று காலை 10:30 மணிக்கு ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். ஓய்வூதியர்கள் தங்களது கோரிக்கை மனுக்களாக எழுதி, இரு நகல்களை ஜூன் 20க்குள் கலெக்டர் பி.ஏ., (கணக்கு) அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும், என்றார்.