ADDED : ஜூலை 16, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரண்மனைவாசலில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா நடந்தது.
மாவட்ட தலைவர் வடிவேலு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்லமுத்து, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் நல சங்க மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி, பள்ளி, கல்லுாரி ஓய்வு பெற்ற ஆசிரியர் நலச்சங்க மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, முன்னாள் மாநில துணை தலைவர் மெய்யப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
நிதி மசோதா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 55 சதவீத அகவிலைப்படி வழங்குவது போல், மாநில அரசும் வழங்க வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர்.