ADDED : ஏப் 10, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துமாடன் தலைமை வகித்தார்.
மாநில துணை செயலாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் பொன் துரைசிங்கம் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பாண்டி வரவேற்றார். மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் அறிக்கை வாசித்தார். பொருளாளர் குணசேகரன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். மாவட்ட துணை தலைவர் நசீரா பேகம், அமைப்பு கணபதி பங்கேற்றனர். துணை செயலாளர் கந்தசாமி சிறப்புரை ஆற்றினார். நிர்வாகி ஞானசேகரன் நன்றி கூறினார்.

