ADDED : பிப் 15, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க திருப்புத்துார் வட்டக் கிளை சார்பில் சங்க அமைப்பு வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடினர்.
வட்டத் தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். மனவளக்கலை மன்ற மன்ற உபதலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். செயலாளர் அர்ச்சுனன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர்கள் சேது, அர்ச்சுனன் ஆகியோர் சங்க செயல்பாடு குறித்து பேசினர். துணைத் தலைவர்கள் சுப்பையா, முத்தையா மன்ற செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வனத்துறை அலுவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

