/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் அசுர வேக பஸ்களால் மக்கள் அச்சம்
/
திருப்புவனத்தில் அசுர வேக பஸ்களால் மக்கள் அச்சம்
ADDED : ஜன 06, 2025 12:13 AM
திருப்புவனம்; திருப்புவனத்தில் பயணிகளை கவர பஸ்கள் அசுர வேகத்தில் செல்வதால் சாலையோர பொதுமக்கள் அச்சத்துடனேயே நடக்க வேண்டியுள்ளது.
திருப்புவனத்தில் இருந்து தினசரி பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் பணி, கூலி வேலை உள்ளிட்ட பணிகளுக்காக தினசரி மதுரை, பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு பலரும் சென்று வருகின்றனர்.
தொடர்ச்சியாக  ரயில் போக்குவரத்து இல்லாததால் பஸ்களை நம்பியே பயணிக்கின்றனர்.
மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களில் பயணிகளை ஏற்றுவதற்காக தாமதமாக கிளம்பினாலும்முன்னால் செல்லும் பஸ்களை முந்துவதற்காக அதிவேகத்தில் இயக்குகின்றனர்.
நான்கு வழிச்சாலையில் அசுரவேகத்தில் பறக்கும் இது போன்ற பஸ்களால் டூவீலர் ஓட்டுபவர்கள் அச்சத்தில் உள்ளனர். இது போன்ற அதிவேக பஸ்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
பலமுறை போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசாரிடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அசுர வேக பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

