/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆக்கிரமிப்பில் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் நடைபாதை கடைகளால் மக்கள் அவதி
/
ஆக்கிரமிப்பில் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் நடைபாதை கடைகளால் மக்கள் அவதி
ஆக்கிரமிப்பில் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் நடைபாதை கடைகளால் மக்கள் அவதி
ஆக்கிரமிப்பில் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் நடைபாதை கடைகளால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 19, 2025 02:41 AM
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் கட்டுமானப்பணி நடந்து வரும் நிலையில் குறுகிய இடத்தில் செயல்படும் பஸ் ஸ்டாண்டில் நடை பாதை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, கோயம்புத்துார், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் 70க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. தினசரி 5 ஆயிரத்திற்கும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்கின்றனர். இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகள் குடிப்பதற்கு குடிநீர் வசதி கிடையாது. பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் ரூ.2 கோடி செலவில் எம்.பி., நிதியில் கட்டுமானப்பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள் ஆங்காங்கே நிறுத்தி இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடைபாதைகளில் சிலர் கடைகளை வைத்து இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். பஸ்கள் உள்ளே வந்து வெளியே செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
பஸ் ஸ்டாண்டின் கட்டுமானப் பணியை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதோடு ஆக்கிரமிப்பை அகற்றவும் வேண்டும்.