ADDED : பிப் 08, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கால்வாய் பாலம் உடைந்ததால் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் மழைக்காலங்களில் மக்கள் தவிக்கின்றனர்.
இவ்வொன்றியத்தில் வடவன்பட்டி ஊராட்சி ஆதிராவிடர் காலனி அருகே அரளிக்கோட்டை மேலுார் ரோட்டில் ஓடைப் பாலம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இப்பாலம் நடுவில் உடைந்து அடைபட்டுக் கொண்டது.
இதனால் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் மழை நீர் ரோட்டை கடக்க முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் மக்கள் மழைக்காலங்களில் தவிக்கின்றனர்.
தற்போது இச்சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில் குறிப்பிட்ட பாலத்தை புதிதாக உயர்த்தி கட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.