/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடை மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருப்பு: குடிநீர், விவசாயத்திற்கு தட்டுப்பாடு அச்சம்
/
கோடை மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருப்பு: குடிநீர், விவசாயத்திற்கு தட்டுப்பாடு அச்சம்
கோடை மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருப்பு: குடிநீர், விவசாயத்திற்கு தட்டுப்பாடு அச்சம்
கோடை மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருப்பு: குடிநீர், விவசாயத்திற்கு தட்டுப்பாடு அச்சம்
ADDED : ஏப் 15, 2025 05:56 AM

மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பருவமழை காலத்தின் போது 80,000 ஏக்கர் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். இதற்கடுத்து கரும்பு, பருத்தி, வாழை போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டு வருகிறது.
இதே போன்று இளையான்குடியில் 1000 எக்டேரில் முதன்மையாக நெல் மற்றும் குண்டு மிளகாய் பயிரிடப்பட்டு வருகிறது. இளையான்குடி பகுதியில் பெரும்பாலும் வானம் பார்த்த பூமி என்பதால் இப்பகுதியில் பெய்யும் மழையை வைத்து விவசாயிகள் பணிகளை செய்து வருகின்றனர்.
பருவமழை காலத்தின் போது வைகை ஆற்றில் வரும் தண்ணீரை கொண்டு மானாமதுரை பகுதியில் உள்ள வைகை பாசன பூர்வீக விவசாயிகள் கிணறுகளில் தேக்கி வைக்கும் நீர் மற்றும் நிலத்தடி நீரை கொண்டும் ஏராளமான விவசாயிகள் கோடை விவசாயமும் செய்து வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் கடுமையாக அடித்து வருவதை தொடர்ந்து கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருவதை தொடர்ந்து உழவு பணிகளை முடித்த விவசாயிகள் மற்ற பணிகளை துவங்கியுள்ள நிலையில் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இளையான்குடி பகுதியிலும் ஏராளமான விவசாயிகள் வயல்வெளிகளில் உழவுப் பணிகளை முடித்துள்ள நிலையில் கோடை மழை பெய்தால் மட்டுமே மற்ற விவசாய வேலைகளை துவங்க முடியும்.
இதைப் போன்று வைகை ஆற்றில் மதுரை - விரகனூர் தடுப்பணையிலிருந்து மானாமதுரை அருகே வேதியரேந்தலில் உள்ள மதகணை வரை நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள்மூலம் மானாமதுரை, திருப்புவனம், அருப்புக்கோட்டை, சிவகங்கை, சாயல்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கும், 300க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் கோடை வெயில் கடுமையாக அடித்து வருவதினால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்வதிலும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
கல்வெளிபொட்டல் விவசாயி தங்கப்பாண்டியன் கூறியதாவது:
இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் 42 கண்மாய்களுக்கு மட்டுமே வைகை தண்ணீர் வருகிறது. இதை தவிர மற்ற நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு அப்பகுதியில் பெய்யும் மழை நீரை வைத்தே நீர் வரத்து உள்ளது. கடந்த பருவ மழையின் போது ஏராளமான கண்மாய்கள் நிரம்பாத சூழ்நிலையில், விவசாயிகள் உழவு பணிகளை முடித்துள்ள நேரத்தில் கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், என்றார்.