/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எதிர்பார்ப்பு மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் விநியோகம் புதிய திட்டமாவது கை கொடுக்குமா என மக்கள்
/
எதிர்பார்ப்பு மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் விநியோகம் புதிய திட்டமாவது கை கொடுக்குமா என மக்கள்
எதிர்பார்ப்பு மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் விநியோகம் புதிய திட்டமாவது கை கொடுக்குமா என மக்கள்
எதிர்பார்ப்பு மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் விநியோகம் புதிய திட்டமாவது கை கொடுக்குமா என மக்கள்
ADDED : டிச 31, 2024 04:44 AM

இளையான்குடி: இளையான்குடியில் செயல்படுத்தப்படும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் அடிக்கடி சேதமடைவதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இளையான்குடியில் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையாக இருப்பதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். இப்பிரச்னையை தீர்க்க 15 வருடங்களுக்கு முன்பு திருச்சி காவிரி ஆற்றில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 55 ஊராட்சிகளை சேர்ந்த 150 க்கு மேற்பட்ட கிராமங்களுக்கும்,இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அடிக்கடி சேதமடைவதால் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் குடிநீரும் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
வாகனங்களில் வரும் குடிநீரை ஒரு குடம் ரூ.15 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இளையான்குடி பகுதி காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு தடை இல்லாமல் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது. தற்போது குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட வருடங்கள் ஆனதாலும், சாலை பணியின் போது குழாய்களை உடைத்து விடுவதாலும் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இதனை சீரமைப்பதற்கான பணியாளர்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளதால் குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு தொடர்கிறது. இதனை சரி செய்ய புதிதாக திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது, என்றனர்.
புதிய திட்டம்:
இந்நிலையில் இளையான்குடி பேரூராட்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்ட வைகை குடிநீர் திட்டம் முடங்கிய நிலையில் அதனை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.28 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இளையான்குடி பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இளையான்குடிக்கு காவிரி கூட்டு குடிநீர் முறையாக வராத காரணத்தினால் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.28 கோடி செலவில் வைகை குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் 5 இடங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு பரமக்குடி வைகை ஆற்று பகுதியில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் தற்போது 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் 100 சதவீத பணிகள் நிறைவு பெற்றவுடன் இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.