/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்லாததால் மக்கள்... கவலை; சிங்கம்புணரியில் குறையும் நிலத்தடி நீர்மட்டம்

ADDED : ஜூன் 29, 2024 06:00 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்லாதவாறு வடிகால் மூடப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
18 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சியில் 20க்கும் மேற்பட்ட சிறிய பெரிய நீர்நிலைகள் உள்ளன. லேசான மழை பெய்தால் கூட சாலைகளில் ஓடிவரும் தண்ணீர் நீர்நிலைகளில் நிரம்பி மறுகாலாக அடுத்த நீர் நிலைகளுக்கு செல்லும் வகையில் சங்கிலித்தொடர் கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் எப்போதும் இந்த நீர் நிலைகளில் தண்ணீர் நிறைவாக இருந்து கொண்டே இருக்கும். ஆனால் சில ஆண்டுகளாக மராமத்து, தூர்வாரும் பணி செய்யப்பட்ட நிலையில் வரத்து கால்வாய்கள் பல இடங்களில் அடைபட்டுபோனது.
சாக்கடை, கழிவு நீர் மட்டும் கலந்து வருகிறது. கால்வாய்களை மழை நீர் வந்து சேரும் வரை வகையில் முறையாக திறந்து விட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த மாதத்தில் பரவலாக மழை பெய்தும் அவை நீர் நிலைகளில் தேங்காமல் வீணாகி வெளியேறுகிறது. எப்போதும் தண்ணீர் நிரம்பி காட்சியளித்த செட்டியார் குளம் உள்ளிட்ட ஊருணிகள் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு போகும் நிலைக்கு வந்துள்ளது. இதனால் நகரில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே நகரில் அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி சாக்கடை நீர் கலக்காமல் மழை நீர் மட்டும் சென்று சேரும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்த மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.