/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டுமான பணிகளை மக்கள் ஆய்வு செய்யலாம்; அமைச்சர் பெரியகருப்பன்
/
கட்டுமான பணிகளை மக்கள் ஆய்வு செய்யலாம்; அமைச்சர் பெரியகருப்பன்
கட்டுமான பணிகளை மக்கள் ஆய்வு செய்யலாம்; அமைச்சர் பெரியகருப்பன்
கட்டுமான பணிகளை மக்கள் ஆய்வு செய்யலாம்; அமைச்சர் பெரியகருப்பன்
ADDED : ஜூலை 22, 2025 11:44 PM
மானாமதுரை; மானா மதுரையில் பழைய கட்டடத்தில் செயல்பட்ட சார் பதிவாளர் பத்திரப்பதிவு அலுவலகம் அகற்றப்பட்டு புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., தமிழரசி முன்னிலை வகித்தார்.
விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: மானாமதுரையில் புதிய கட்டடம் கட்ட காலக்கெடு 7 மாதம் நிலையில் இதனை ஒப்பந்ததாரர்கள் காலம் தாழ்த்தாமல் விரைவாக 5 மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும்.
கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்தாலும் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் நடைப்பயிற்சிக்கு செல்லும் போது கட்டட பணியை பார்வையிட்டு நல்ல முறையில் நடைபெற உதவ வேண்டும் என்றார்.