/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொழுக்கட்டைபட்டியில் வீணாகும் காவிரி கூட்டு குடிநீர்: மக்கள் புகார்
/
கொழுக்கட்டைபட்டியில் வீணாகும் காவிரி கூட்டு குடிநீர்: மக்கள் புகார்
கொழுக்கட்டைபட்டியில் வீணாகும் காவிரி கூட்டு குடிநீர்: மக்கள் புகார்
கொழுக்கட்டைபட்டியில் வீணாகும் காவிரி கூட்டு குடிநீர்: மக்கள் புகார்
ADDED : ஆக 19, 2025 08:03 AM

சிவகங்கை, : கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து சிவகங்கைக்கு குடிநீர் கொண்டு வரும் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது.
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட மக்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்கும் பொருட்டு, கரூர் மாவட்டம் குளித்தலையில் காவிரி ஆற்றின் கரையில் உறை கிணறு அமைத்து, குடிநீர் எடுத்து வந்து சிவகங்கை மாவட்ட மக்களுக்கு வழங்கும் நோக்கில், திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக குளித்தலையில் இருந்து நாட்டரசன்கோட்டை வழியாக சிவகங்கைக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிந்து உள்ளது.
விரைவில் காவிரி குடிநீர் எஞ்சிய சிவகங்கை மாவட்ட மக்களுக்கும் வினியோகம் செய்யப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொழுக்கட்டைபட்டியில் வீணாகும் குடிநீர் இக்குடிநீர் திட்டத்தின் கீழ் நாட்டரசன்கோட்டை அருகே கொழுக்கட்டை பட்டியில் வால்வு பொருத்தியுள்ளனர். இந்த வால்வு வழியே காவிரி குடிநீர் வரும் போது, காற்றிற்காக கொஞ்சமாக தண்ணீர் வெளியேறும். ஆனால், கடந்த சில நாட்களாக கொழுக் கட்டைபட்டி குடிநீர் வால்வு குழாயில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறி, அப்பகுதி கால்வாய்களில் ஓடு கிறது.
சோதனை ஓட்டத்திற்காக வீணாகும் குடிநீர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
குளித்தலையில் இருந்து சிவகங்கைக்கு புதிதாக காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தை கொண்டுவர குழாய் பதித்து, அந்த குழாய் வழியே சோதனை ஓட்டமாக கழிவு நீர் வெளியேற்ற தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழுக்கட்டைபட்டி குடிநீர் வால்வு குழாயில் அதிக அளவில் தண்ணீர் செல்லும். சோதனை ஓட்டம் முடிந்த பின் மக்கள் பயன்பாட்டிற்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படும், என்றார்.