/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாதாள சாக்கடை இணைப்பிற்கு தரமற்ற குழாய்: மக்கள் புகார்
/
பாதாள சாக்கடை இணைப்பிற்கு தரமற்ற குழாய்: மக்கள் புகார்
பாதாள சாக்கடை இணைப்பிற்கு தரமற்ற குழாய்: மக்கள் புகார்
பாதாள சாக்கடை இணைப்பிற்கு தரமற்ற குழாய்: மக்கள் புகார்
ADDED : மே 17, 2025 01:03 AM
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் தரமற்ற குழாய்கள் மூலம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு நடப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
காரைக்குடியில் 2017ம் ஆண்டு ரூ.112.5 கோடியில் பாதாளச்சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் நடந்த பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து தேவகோட்டை ரஸ்தா பகுதியில் அமைந்துஉள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.
விடுபட்ட பகுதிகளுக்கு, தற்போது அம்ருத்2.0 திட்டத்தின் கீழ் ரூ.35 கோடி மதிப்பீட்டில், பாதாளச் சாக்கடை பணி நடைபெறுகிறது. விடுபட்ட பகுதிகளுக்கு இணைப்பு வழங்கப்படும் நிலையில் தரமற்ற குழாய்கள் மூலம் இணைப்பு வழங்குவதாக மக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
7வது வார்டு கவுன்சிலர்குருபாலு கூறுகையில், பாதாள சாக்கடை திட்டம் விடுபட்ட பகுதிகளான அண்ணா நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் குழாய் இணைப்பு பணி நடந்து வருகிறது. ஆரம்பத்தில் தரமான குழாய்கள் மூலம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டது. தற்போது தரமற்ற குழாய்கள் மூலம் இணைப்பு வழங்கப்படுகிறது.
ஒரு சில மாதங்களிலேயே தரமற்ற குழாயால் பல்வேறு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அடிக்கடி சாலையை தோண்டி சரி செய்யும் பணி செய்ய வேண்டியுள்ளது. பணியாளர்களிடம் கேட்டால், எங்களுக்கு கொடுத்த குழாய்களை தான் பதிக்க முடியும் என்கின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பாதாள சாக்கடை இணைப்பு தரமான குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. முன்பு வழங்கப்பட்ட மஞ்சள் நிற குழாய்கள் மூலம் இணைப்பு வழங்க மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அதே குழாய் மூலம் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.