/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அறிவொளி நகர் ஊரணிக்கு வரும் வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் மக்கள் புகார்

ADDED : நவ 11, 2025 03:40 AM
சிவகங்கை: இளையான்குடி தாலுகா முனைவென்றி அறிவொளி நகரில் ஊரணிக்கு செல்லும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் என ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
இளையான்குடி அருகே முனைவென்றி கிராமத்தில் அறிவொளி நகரில் ஊரணி உள்ளது. இந்த ஊரணிக்கு செல்லும் வரத்து கால்வாய்களை தனி நபர் ஆக்கிரமித்து வைத்துள்ளார்.
இதனால் மழை காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல் ஆக்கிரமிப்பால் தடை பட்டு ஊரணிக்கு தண்ணீர் சேகரமின்றி வீணாகிறது. எனவே ஊரணிக்கு வரும் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் என கலெக்டர் பொற்கொடியிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையிலான நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.